எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி மேலவலம்பேட்டையில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி மேலவலம்பேட்டையில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மத்திய மாவட்டம், மதுராந்தகம் தொகுதி அதிமுக சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மதுராந்தகம் ஒன்றிய அதிமுக செயலர் கோ.அப்பாதுரை தலைமை வகித்தார். மதுராந்தகம் முன்னாள் ஒன்றியக் குழு பெருந்தலைவர் வள்ளி அப்பாதுரை, மதுராந்தகம் நகரச் செயலர் வி.ரவி, அச்சிறுப்பாக்கம் ஒன்றியச் செயலர் சுப்பிரமணி, கட்சி பொதுக்குழு உறுப்பினர் கிருபாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருங்குழி பேரூர் செயலர் கே.பழனி, மாவட்டச் செயலர் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் கே.மரகதம்குமரவேல், மாவட்ட பேரவைச் செயலர் ஆனூர்பக்தவத்சலம், தலைமைக் கழகப் பேச்சாளர் புலவர் சோமுசா, முன்னாள் எம்எல்ஏ எஸ்.கணிதாசம்பத், மாவட்ட மருத்துவரணிச் செயலர் மருத்துவர் எஸ்.ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணிச் செயலர் சி.விவேகானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமமுக சார்பில்...
எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் படப்பை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. 
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், குன்றத்தூர் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி படப்பை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலர் மொளச்சூர் ரா.பெருமாள் தலைமை வகித்தார். குன்றத்தூர் ஒன்றியச் செயலர் மலைப்பட்டு ராதாகிருஷ்ணன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் ஆர்.நாராயணசாமி, எம்ஜிஆர் மன்றச் செயலர் ரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் திருக்கழுகுன்றம் வெங்கடேசன், செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, மண்டல பொறுப்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தமிழன்ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட மகளிர் அணிச் செயலர் வரலட்சுமி, படப்பை ஊராட்சி செயலர் சேகர், மீன் மாரி, விவேகானந்தன், மணிமங்கலம் பிரபாகரன், சிறுமாத்தூர் ராஜா, நித்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com