பதிவுத்துறை அலுவலர் வீட்டில் ரூ.1 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் பறிமுதல்

பதிவுத்துறை அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான 70 நிலப்பத்திரங்கள் பறிமுதல்


பதிவுத்துறை அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான 70 நிலப்பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில்  மாவட்ட பதிவுத்துறை அலுவலகத்தில் சார்-பதிவாளராகப் பணிபுரிந்து வருபவர் ராமமூர்த்தி (57). அவர் காஞ்சிபுரம் ரங்கசாமிக் குளம் அருகில் உள்ள கோட்ராம்பாளையம் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 
அந்த வீட்டுக்கு அருகில் தனது மனைவி பெயரில் அவர் ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ராமமூர்த்தியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடத்தினர். கடந்த பிப்ரவரி மாதம்  மதுராந்தகம் பதிவுத்துறை அலுவலகத்தில் அவர் பணியாற்றினார். அப்போது, நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. 
இந்நிலையில், ராமமூர்த்தியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது ரூ.1 கோடி மதிப்பிலான 70 நிலப் பத்திரங்கள், ரூ.1.5 லட்சம் ரொக்கம், 15 வங்கிக் கணக்கு ஆவணங்கள், 35 சவரன் தங்க நகைகள் உள்ளிட்ட கணக்கில் வராத பொருள்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். 
மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி உத்தரவின்பேரில் ராமமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com