செல்லியம்மன் கோயில் குளத்தை தூர்வாரும் பணி தொடக்கம்

திருக்கழுகுன்றத்தை அடுத்த தத்தலூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் குளத்தைத் தூர்வாரும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.  
செல்லியம்மன் கோயில் குளத்தை தூர்வாரும் பணி தொடக்கம்


திருக்கழுகுன்றத்தை அடுத்த தத்தலூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் குளத்தைத் தூர்வாரும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.  
இதுகுறித்து ஓராசிரியர் பள்ளி அமைப்பின் தலைவர் கே.என்.இ. கிருஷ்ணமூர்த்தி கூறியது: காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருவாரூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 850 கிராமங்களில், சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் ஓராசிரியர் பள்ளிகளில் மாலை நேர வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.  
கல்வித் தொண்டு மட்டுமல்லாமல் கிராமத்தின் ஒட்டு மொத்த  வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் வகையில், 58 கிராமங்களில்  சுமார் 583  கழிப்பறைகளுடன்  கூடிய குளியல் அறைகள் ரூ. 2.90 கோடி செலவில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.  
மேலும் கிராமங்களில் உள்ள ஏழைகள் பயன்படும் வகையில் இலவச கண் பரிசோதனை முகாம், புற்றுநோய் பரிசோதனை, பெண்களுக்கான மருத்துவம் மற்றும் பொது மருத்துவ முகாம்கள் ஓராசிரியர் பள்ளிகளின் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. 
தற்போது தண்ணீர்ப் பிரச்னை தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் குளங்களைத் தூர்வாரும் பணிகளைத் தொடங்கியுள்ளோம்.  வேலூர், நெமிலி வட்டத்தில் பள்ளக்குளத்தூர் கிராமம், எல்லாத்தூர் கிராமம், திருவள்ளூர் மாவட்டத்தில் காஞ்சிபாடி கிராமம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுரமங்கலம் கிராமத்தில் உள்ள குளங்கள்,  திருக்கழுகுன்றம் வட்டம் தத்தலூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் குளம் ஆகியவற்றை ரூ. 15 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளனஎன்று கூறினார். 
இதைத் தொடர்ந்து, தத்தலூர் செல்லியம்மன் கோயில் குளத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கின. இதில், களப் பணியாளர் சீனிவாசன் மேற்பார்வையில் கிராம மக்களும் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com