குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாளையொட்டி மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் புதன்கிழமை
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு


உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாளையொட்டி மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் புதன்கிழமை உறுதிமொழி ஏற்றனர்.
உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. 
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியினை அனைத்து அரசுத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றனர். 
இதையடுத்து, குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை ஆட்சியர் வெளியிட்டார்.  இக்கூட்டத்தில், குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
பல்லாவரம் செயின்ட் தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி பவானி, கெருகம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி வசந்தி, பிள்ளையார்பாளையம் சி.எஸ்.எம். நகராட்சி மேல்நிலைப்பள்ளி  மாணவி புவனேஸ்வரி, 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற  ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி காயத்ரி, இரண்டாமிடம் பெற்ற மாணவி துர்கா,  மூன்றாமிடம் பெற்ற மாணவி பிரியதர்ஷினி, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற செங்கல்பட்டு  செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவர் நிதீஷ்குமார்,  இரண்டாமிடம் பெற்ற  கண்ணகி நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா, மூன்றாமிடம் பெற்ற காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிஷா  ஆகியோருக்கு சான்றிதழ், நினைவுப்பரிசுகள் ஆகியவற்றை வழங்கி ஆட்சியர் பாராட்டினார். 
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கணக்குகள்) சீனிவாசன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் க.ரவி ஜெயராம்,  சைல்டு லைன் இயக்குநர் சுவாமிநாதன், குழந்தைத் தொழிலாளர்  முறை அகற்றும் திட்டத்தின்  முதன்மை மேலாளர் மோகனவேல், சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன்,  மாவட்ட பாதுகாப்பு அலகு அலுவலர் திரு.மதியழகன்,  பூங்காவனம் பாரதியார் உறைவிடப் பள்ளி  மாணவர்கள், தொண்டு நிறுவன அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com