திருக்கழுகுன்றம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு
By DIN | Published On : 14th June 2019 04:18 AM | Last Updated : 14th June 2019 04:18 AM | அ+அ அ- |

திருக்கழுகுன்றம் அரசு மருத்துவமனையில் திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ இதயவர்மன் அனைத்து வார்டுகளையும் ஆய்வு செய்தார்.
அப்போது, பணியில் இருந்த மருத்துவர்கள், இந்த மருத்துவமனையில் 30 படுக்கைகள் மட்டுமே உள்ளதாகவும், இன்னும் 20 படுக்கைகள் தேவை என்றும், நவீன சிகிச்சைக் கருவிகள், பணியாளர்கள் பற்றாக்குறை குறித்தும் எம்எல்ஏவிடம் தெரிவித்தனர்.
அதற்கு எம்எல்ஏ இதயவர்மன் தனது சட்டப்பேரவைத் தொகுதி நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து 20 படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
ஆய்வின்போது, எம்எல்ஏவுடன் திமுக நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏவுமான வீ.தமிழ்மணி, பேரூர் நகரச் செயலர் யுவராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.