மாற்றுத் திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத் திறனாளிகள் அரசு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மாற்றுத் திறனாளிகள் அரசு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை, பட்டம், பட்ட மேற்படிப்பு, மருத்துவம், அனைத்து தொழிற்கல்வி, பட்டயப் படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.1,000 முதல் ரூ.7,000 வரை வழங்கப்படுகிறது. அதேபோல், பார்வையற்ற கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு வாசிப்பாளர் உதவித்தொகையாக ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது. 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகள், கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்ப ங்களை http://kancheepuram.nic.in/departments / district differently abled welfare / differently abled welfare schemes என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், ஜிஎஸ்டி சாலை, நீதிமன்றம் அருகில், செங்கல்பட்டு எனும் முகவரியில் விண்ணப்பிக்கலாம். 
மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசு கல்வி உதவித்தொகை, 9ஆம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு, தொழிற்கல்வி, மருத்துவ கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்வி உதவித்தொகை பெற https://scholarships.gov.in/ department of empowerment of persons with disabilities என்ற இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
மேலும், கல்வி பயிலும் பள்ளித் தலைமையாசிரியர் அல்லது கல்லூரி முதல்வரால் இணையதளம் மூலம் வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்யவேண்டும். இந்த இரண்டு திட்டங்களுக்கும் விரிவான விவரங்களுக்கு மாவட்ட  மாற்றுத் திறனாளி நல அலுவலரை 044- 27431853 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com