அத்திவரதர் பெருவிழா: வரதர் கோயில் இணையதளத்தில் தகவல் இல்லை
By DIN | Published On : 25th June 2019 04:31 AM | Last Updated : 25th June 2019 04:31 AM | அ+அ அ- |

வரதராஜப் பெருமாள் கோயிலின் இணையதளப் பக்கத்தில் அத்திவரதர் பெருவிழா குறித்து தகவல் பதிவேற்றப்படவில்லை.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 48 நாள்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. அத்திவரதர் பெருவிழா குறித்து உள்ளூர், அண்டை மாவட்ட மக்கள் ஊடகங்கள் மூலம் தகவல்களை அறிந்து கொள்கின்றனர். வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வாழ்வோர் வரதராஜப் பெருமாள் கோயிலின் இணையதளப் பக்கத்தில் இவ்விழா குறித்து தகவல் தேடி வருகின்றனர். விழாவுக்கு இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில் இதுவரை இந்த இணையதள பக்கத்தில் விழா தொடர்பான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.