போக்குவரத்துக் கழக வழக்குகளுக்கு நாளை சிறப்பு மக்கள் நீதி மன்றம்

மாநில சட்டப்பணிகள் குழு சார்பில் போக்குவரத்துக் கழக வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்)    சனிக்கிழமை  நடைபெறவுள்ளது.


மாநில சட்டப்பணிகள் குழு சார்பில் போக்குவரத்துக் கழக வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்)    சனிக்கிழமை  நடைபெறவுள்ளது.
மாநில சட்டப்பணிகள் குழுவினர் சார்பில், போக்குவரத்துக் கழகம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசத் தீர்வு காணும் வகையில் சனிக்கிழமை (மார்ச் 9) மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறவுள்ளது.
 இதில், மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு, ஆலோசனைகள் பெறுதல், தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகள், பணி, ஓய்வூதியப் பலன்கள் குறித்த வழக்குகளில் தீர்வு காணப்படவுள்ளது. 
அதன்படி, சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அனைத்து சார்பு தொழிலாளர், மாவட்ட நீதிமன்றங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெறும். 
மேலும் விவரங்களுக்கு, போக்குவரத்துக் கழகங்கள் சம்பந்தபட்ட வழக்குகள் குறித்து, விழுப்புரம் மண்டலம்-9445456009, வேலூர் மண்டலம்-9445456025, கடலூர் மண்டலம்-9445456021, காஞ்சிபுரம் மண்டலம்-9445456036, திருவண்ணாமலை மண்டலம்- 9445456042 ஆகிய போக்குவரத்துக் கழக செல்லிடப்பேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக (விழுப்புரம்) மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com