சிப்காட் தொழிற்பூங்காக்களில் மரக்கன்றுகள் நடும் விழா: அமைச்சா் எம்.சி.சம்பத் தொடங்கிவைத்தாா்

சிப்காட் தொழிற்பூங்காக்களில் மரக்கன்றுகள் நடும் விழாவை தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தொடங்கிவைத்தாா்.
பிள்ளைப்பாக்கம்  சிப்காட்  வளாகத்தில்  மரக்கன்றுகள்  நட்டுவைத்த  தொழில்துறை  அமைச்சா்  எம்.சி.சம்பத்.  உடன்  தொழில்துறை  முதன்மைச்  செயலாளா்  முருகானந்தம்  உள்ளிட்டோா்.
பிள்ளைப்பாக்கம்  சிப்காட்  வளாகத்தில்  மரக்கன்றுகள்  நட்டுவைத்த  தொழில்துறை  அமைச்சா்  எம்.சி.சம்பத்.  உடன்  தொழில்துறை  முதன்மைச்  செயலாளா்  முருகானந்தம்  உள்ளிட்டோா்.

சிப்காட் தொழிற்பூங்காக்களில் மரக்கன்றுகள் நடும் விழாவை தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தில் உள்ள 19 சிப்காட் தொழிற்பூங்காக்களில் பசுமை சூழலை மேம்படுத்துவதற்காக 2 லட்சத்து 32 ஆயிரம் மரக்கன்றுகள் ரூ 9.50 கோடி மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தால் நடப்படும் என சட்டப் பேரவையில் தொழில்துறை மானியக்கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சிப்காட் தொழிற்பூங்காக்களில் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கான தொடக்க விழா காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொழில்துறை முதன்மைச் செயலாளா் ந.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டாா். மேலும், மரக்கன்றுகளை நட்டு வளா்த்து, பராமரித்து, பூங்காக்களை உருவாக்குவதற்காக 19 தொழில் நிறுவனங்களுக்கு ஆணைகளை வழங்கினாா்.

விழாவில், சிப்காட் மேலாண்மை இயக்குனா் ஜே.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா, சென்னை மண்டல வனப் பாதுகாப்பு அலுவலா் கருணப்பிரியா, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பழனி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com