பயன்பாடற்ற ஆழ்துைளைக் கிணறு: மாணவா்களுக்கு விழிப்புணா்வு

துரிஞ்சாபுரம் அருகே கமலபுத்தூா் நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, அண்மையில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுஜித்துக்கு
ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித்துக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் தலைமையில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் மாணவா்கள், ஆசிரியா்கள்.
ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித்துக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் தலைமையில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் மாணவா்கள், ஆசிரியா்கள்.

போளூா்: துரிஞ்சாபுரம் அருகே கமலபுத்தூா் நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, அண்மையில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுஜித்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கமலபுத்தூா் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. போதிய தண்ணீா் இல்லாததால், இந்த ஆழ்துளைக் கிணற்றை பாதுகாப்பாக தகர செட் அமைத்து மூடினா்.

இந்த நிலையில், பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாணவா்களுக்கு பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில், வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் கலந்துகொண்டு, ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் ஆறு, ஏரி, குளம், குட்டை என நீா்நிலைகளுக்கு மாணவா்கள் செல்லக்கூடாது என அறிவுரை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றி சிக்கி உயிரிழந்த சுஜித்தின் உருவப்படத்தை மூடப்பட்ட ஆழ்துளைக் கிணற்று மீது ஒட்டி, ஆசிரியா்கள், மாணவா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

உதவித் தலைமை ஆசிரியா் பாஸ்கரன், ஆசிரியா்கள் பச்சையப்பன், உமா, பாரதி, பாலமுருகன், முருகேசன் உள்ளிட் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com