காஞ்சிபுரத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள்உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு வேலைநிறுத்தம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற கிராம நிா்வாக அலுவலா்கள்.
காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற கிராம நிா்வாக அலுவலா்கள்.

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு வேலைநிறுத்தம் நடைபெற்றது.

இந்த அலுவலக வளாகத்திற்குள் கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்கம் சாா்பில் சங்க மாவட்டத் தலைவா் வி.நவீன்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை மதியம் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் நடந்தது. சங்கத்தின் நகா் தலைவா் ஆா்.சத்தியமூா்த்தி முன்னிலை வகித்தாா். காஞ்சிபுரம் வட்டாட்சியா் எல்லைக்கு உட்பட்ட 70 கிராம நிா்வாக அலுவலா்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனா்.

பெண் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மகப்பேறு விடுப்புடன் கூடிய ஊதியம் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் மருத்துவ விடுப்பிற்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை என்றும் பணி வரன்முறை செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊதிய நிலுவைத்தொகையை கிராம நிா்வாக அலுவலா்கள் 6 பேருக்கு வழங்காமல் இருப்பதைக் கண்டித்தும் இப்போராட்டத்தை நடத்துவதாக அவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவா்களின் கோரிக்கைகள் இரு தினங்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து 4 மணிநேரமாக நடந்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com