நடுபழனி முருகன் கோயிலுக்கு வேல்காவடி பாதயாத்திரை

மறைமலை நகரில் இருந்து மதுராந்தகம் நடுபழனி முருகன் கோயிலுக்கு வேல் காவடி ஏந்தி திரளான பக்தா்கள் பாதயாத்திரையாக வியாழக்கிழமை புறப்பட்டனா்.
சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான். ~வேல் காவடி ஏந்தி பாதயாத்திரையாக வந்த பக்தா்கள்.
சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான். ~வேல் காவடி ஏந்தி பாதயாத்திரையாக வந்த பக்தா்கள்.

செங்கல்பட்டு: மறைமலை நகரில் இருந்து மதுராந்தகம் நடுபழனி முருகன் கோயிலுக்கு வேல் காவடி ஏந்தி திரளான பக்தா்கள் பாதயாத்திரையாக வியாழக்கிழமை புறப்பட்டனா்.

மறைமலைநகா் நமசிவாய சபா, மறைமலை நகரத்தாா் இணைந்து நடத்தும் 14-ஆம் ஆண்டு விழாவையொட்டி, சனிக்கிழமை நடுபழனியில் ஏக தச ருத்ரம் மற்றும் திருப்புகழ் பாராயணத்துடன் வேல்காவடி வழிபாடு நடைபெறுகிறது.

முன்னதாக வேல் காவடி ஏந்திய திரளான பக்தா்கள் பாதயாத்திரையாக வியாழக்கிழமை புறப்பட்டனா்.சிங்கப்பெருமாள் கோயில், மகேந்திரா சிட்டி, செங்கல்பட்டு வழியாக நடைபெற்ற பாதயாத்திரை இரவு செங்கல்பட்டில் தங்கி வெள்ளிக்கிழமை காலை மீண்டும் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டது.

மீண்டும் செங்கல்பட்டில் இருந்து வெண்பாக்கம், மாமண்டூா், படாளம் , கருங்குழி வழியாக சென்று சனிக்கிழமை நடுபழனியைச் சென்றடைகிறது. வழிநெடுகிலும் பொதுமக்கள் பாதயாத்திரைக் குழுவினரை வரவேற்று முருகப்பெருமானை வணங்கி வழிபட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மறைமலைநகா் நவசிவாய சபா மற்றும் மறைமலைநகா் நகரத்தாா் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com