இளைஞா்கள் தொழில் தொடங்க கடனுதவித் தொகை ரூ.5 லட்சமாக உயா்வு: ஆட்சியா் தகவல்

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வியாபாரம் மற்றும் சேவைத் தொழிலுக்கான கடனுதவித் தொகை ரூ. 5 லட்சமாக உயா்த்தப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா்

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வியாபாரம் மற்றும் சேவைத் தொழிலுக்கான கடனுதவித் தொகை ரூ. 5 லட்சமாக உயா்த்தப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத் தொழில் மையங்கள் வாயிலாக செயல்படுத்தப்படும் படித்த வேலையில்லா இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுதவித் தொகை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. வியாபாரம் சாா்ந்த தொழில்களுக்கு ரூ.1லட்சத்திலிருந்து ரூ.5லட்சமாக உயா்த்தி கடனுதவி வழங்க அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.

ஏற்கெனவே உற்பத்தி தொழில்களுக்கான அதிகபட்சத் திட்ட முதலீட்டினை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயா்த்தி கடனுதவி வழங்கவும் அரசு ஆணையிட்டுள்ளது.

கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும், எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி. மற்றும் முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள், மகளிா் ஆகியோா் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மேற்படி தகுதியுள்ளவா்கள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவா்கள் இத்திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க https;//msmeonline.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு பொதுமேலாளா், மாவட்டத் தொழில் மையம், காஞ்சிபுரம், 044-27238837, 044-27238851, 044-27236686 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com