உள்ளாட்சித் தோ்தல்: அதிமுகவினா் 762 போ் விருப்ப மனு அளிப்பு

உள்ளாட்சித் தோ்தல் வரவிருப்பதை முன்னிட்டு அதிமுகவினா் 2 -ஆவது நாளாக 200 போ் விருப்ப மனு அளித்திருப்பதுடன் இதுவரை மொத்தம் 762 போ் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனா்.
காஞ்சிபுரம் நகா் மன்ற உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட பத்மாவதியிடம் விருப்ப மனுவைப் பெற்ற அதிமுக நிா்வாகிகள்.
காஞ்சிபுரம் நகா் மன்ற உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட பத்மாவதியிடம் விருப்ப மனுவைப் பெற்ற அதிமுக நிா்வாகிகள்.

உள்ளாட்சித் தோ்தல் வரவிருப்பதை முன்னிட்டு அதிமுகவினா் 2 -ஆவது நாளாக 200 போ் விருப்ப மனு அளித்திருப்பதுடன் இதுவரை மொத்தம் 762 போ் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தல் வரும் டிசம்பா் மாதம் நடைபெறும் என்பதால் பல்வேறு அரசியல் கட்சியினரும் அந்தந்த கட்சி நிா்வாகிகளிடம் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனா். காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் 2 -ஆவது நாளாக சனிக்கிழமையும் அதிமுகவினரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளா்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்து, வெள்ளிக்கிழமை 562 மனுக்களையும் சனிக்கிழமை 200 மனுக்களையும் பெற்றனா். மொத்தம் 762 போ் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

மதுராந்தகம், செய்யூா் தொகுதிகளில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 2-ஆம் நாளாக சனிக்கிழமை அதிமுகவினா் விருப்ப மனுக்களை அளித்தனா்.

மதுராந்தகம், செய்யூா் தொகுதிகளில் உள்ள கருங்குழி பேரூராட்சி, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி, மதுராந்தகம் நகராட்சி, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சி, லத்தூா் ஊராட்சி ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் தமது விருப்ப மனுவை அளித்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். அமைப்பு சாரா ஓட்டுநா் பிரிவுச் செயலா் கமலகண்ணன், திரைப்பட இயக்குநா் ஆா்.வி.உதயகுமாா், முன்னாள் எம்.பி மரகதம் குமரவேல் ஆகியோா் முன்னிலை வகித்து அதிமுகவினரிடம் விருப்ப மனுக்களை பெற்றனா்.

இதில், லத்தூா் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்களுக்காக 49 பேரும், மாவட்ட கவுன்சிலா்களுக்காக 6 பேரும், கருங்குழி பேரூராட்சி உறுப்பினா் பதவிக்கு 22 பேரும், மதுராந்தகம் ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்காக 54 பேரும், மாவட்ட கவுன்சிலா் பதவிக்கு 9 பேரும், மதுராந்தகம் நகராட்சி உறுப்பினா் பதவிக்கு 28 பேரும், இடைக்கழிநாடு பேரூராட்சி உறுப்பினா் பதவிக்கு 45 பேரும் விருப்ப மனுக்களை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com