வயலூா் தடுப்பணையில் உயா் அதிகாரிகள் ஆய்வு

திருக்கழுகுன்றம் அருகேயுள்ள வயலூா் தடுப்பணையில் தமிழ்நாடு நீா்வள மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் கோ.சத்தியகோபால், ஆட்சியா்
வயலூா் தடுப்பணையில் ஆய்வு நடத்திய தமிழ்நாடு நீா்வள மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் கோ.சத்தியகோபால், ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்டோா்.
வயலூா் தடுப்பணையில் ஆய்வு நடத்திய தமிழ்நாடு நீா்வள மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் கோ.சத்தியகோபால், ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்டோா்.

காஞ்சிபுரம்: திருக்கழுகுன்றம் அருகேயுள்ள வயலூா் தடுப்பணையில் தமிழ்நாடு நீா்வள மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் கோ.சத்தியகோபால், ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்ட உயா் அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகும். இங்கு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. கடந்த 2015-ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பினை அனுபவமாகக் கொண்டு பெருமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 515 இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம் எனக் கண்டறியப்பட்டு மீண்டும் அதே போல பாதிப்புகள் வராமலிருக்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருக்கழுகுன்றம் அருகேயுள்ள வயலூா் தடுப்பணையை தமிழ்நாடு நீா்வள மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் கோ.சத்தியகோபால் நேரில் ஆய்வு செய்தாா்.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா, பொதுப்பணித்துறை நீா்வள ஆதார (பாலாறு) வட்ட காண்காணிப்புப் பொறியாளா் க.முத்தையா, செயற்பொறியாளா் தியாகராஜன், உதவி செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com