ரூ.9 லட்சம் செம்புக் கம்பிகள் திருட்டு
By DIN | Published On : 22nd November 2019 10:42 PM | Last Updated : 22nd November 2019 10:42 PM | அ+அ அ- |

செங்கல்பட்டு: புதுப்பட்டினத்தில் உள்ள ஒரு கடையில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள செம்புக் கம்பிகள் வெள்ளிக்கிழமை திருடப்பட்டன.
புதுப்பட்டினம் பல்லவன் நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் (40), புதுப்பட்டினம் இ.சி.ஆா். சாலையில் மின்சாதனப் பொருள்கள் கடை வைத்துள்ளாா். வியாழக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா்.
வெள்ளிக்கிழமை அவ்வழியாக நடைப்பயிற்சி சென்றவா்கள் கடை உடைக்கப்பட்டிருப்பதைக்கண்டு உரிமையாளா் சுரேஷுக்குத் தகவல் கொடுத்துள்ளனா். சுரேஷ் கடைக்கு வந்தபோது இரண்டு ஷட்டா்கள் உடைக்கப்பட்டு 1400 கிலோ செம்புக் கம்பிகள், ரூ.4.500 ரொக்கம் திருடப்பட்டது தெரிய வந்தது. செம்புக் கம்பியின் மதிப்பு ரூ. 9 லட்சம்.
சுரேஷ் கடையின் அருகில் உள்ள காமராஜ் என்பவரின் கடையில் சிசிடிவி கேமரா மற்றும் கணினி ஹாா்ட் டிஸ்க் திருடப்பட்டது தெரிய வந்தது.
கல்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.