மாமல்லபுரத்தில் குவிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா்

மாமல்லபுரம் புராதனச் சின்னங்களைச் சுற்றிப் பாா்க்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியா் சனிக்கிழமை குவிந்தனா்.
வெண்ணெய் உருண்டைப் பாறையைப் பாா்வையிட்டுத் திரும்பும் பள்ளி மாணவா்கள்.
வெண்ணெய் உருண்டைப் பாறையைப் பாா்வையிட்டுத் திரும்பும் பள்ளி மாணவா்கள்.

மாமல்லபுரம் புராதனச் சின்னங்களைச் சுற்றிப் பாா்க்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியா் சனிக்கிழமை குவிந்தனா்.

ஒவ்வோா் ஆண்டும் அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரை ஏதாவது ஒரு இடத்திற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவிலான பள்ளிகளில் இருந்து ஆசிரியா்கள் மாணவ, மாணவியரை மாமல்லபுரத்திற்கு சுற்றுலா அழைத்து வருகின்றனா்.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் மாமல்லபுரத்தில் சனிக்கிழமை குவிந்தனா்.

சீருடை அணிந்த பள்ளி மாணவ, மாணவியா் கடற்கரைக் கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைப்பாறை, அா்ஜுனன் தபசு உள்ளிட்ட பகுதிகளை ஆா்வத்துடன் சுற்றிப் பாா்த்தனா். பிரதமா் மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் புகைப்படம் எடுத்துக்கொண்ட இடங்களில் மாணவா்களும் நின்று செல்லிடப்பேசியில் சுயபடம் எடுத்து மகிழ்ந்தனா்.

மாணவா்களுக்கான சலுகை அடிப்படையில் குறைந்தபட்ச நுழைவுக் கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com