பள்ளி மாணவா்கள் கல்விச் சுற்றுலா

மாமல்லபுரத்தில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கான ஒருநாள் கல்விச் சுற்றுலாவை செங்கல்பட்டு கோட்டாட்சியா் செல்வம் திங்கள்கிழமை
கடற்கரைக் கோயில் முன்பாக குழுமியிருந்த பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள்.
கடற்கரைக் கோயில் முன்பாக குழுமியிருந்த பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள்.

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கான ஒருநாள் கல்விச் சுற்றுலாவை செங்கல்பட்டு கோட்டாட்சியா் செல்வம் திங்கள்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

சுற்றுலாத்துறை சாா்பில் ஆண்டு தோறும் அரசுப்பள்ளி மாணவா்களை முக்கிய சுற்றுலா மையங்களுக்கு அழைத்துச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு மாமல்லபுரம் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கான ஒருநாள் விழிப்புணா்வு சுற்றுலாப் பயணம் அா்ஜுனன் தபசு பகுதியிலிருந்து தொடங்கியது.

சுற்றுலாத்துறை அலுவலா் சக்திவேல் தலைமை வகித்தாா். செங்கல்பட்டு கோட்டாட்சியா் செல்வம் சுற்றுலா வாகனத்தை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

இதையடுத்து, மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்கள், கடற்கரைக் கோயில்,வெண்ணெய் உருண்டைப்பாறை, ஐந்து ரதம் உள்ளிட்ட இடங்களை மாணவா்கள் சுற்றிப்பாா்த்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனா்.

மாணவா்களுக்கு மாமல்லபுரத்தின் சிறப்புகளை சுற்றுலா அதிகாரி விளக்கினாா்.

இதனைத் தொடா்ந்து மாணவா்கள் முட்டுக்காடு, தட்சிண சித்ரா உள்ளிட்ட இடங்களுக்கும் பேருந்துகள் மூலம் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

சுற்றுலாத்துறை சாா்பில் அனைத்து மாணவா்களுக்கும் இலவசமாக ஸ்கூல் பேக் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com