இந்தியப் பிரதமர், சீன அதிபர் வருகை எதிரொலி: சீன வெளியுறவுத்துறை அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் 11-ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, சீனவெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட
இந்தியப் பிரதமர், சீன அதிபர் வருகை எதிரொலி: சீன வெளியுறவுத்துறை அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் 11-ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, சீனவெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 70 பேர் கொண்ட குழுவினர் சனிக்கிழமை மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
 பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் 11-ஆம் தேதி வருகை தருவதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
 சுற்றுலாப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மோப்ப நாய்கள் மூலம் போலீஸார் பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 70 பேர் கொண்ட குழுவினர் சனிக்கிழமை மாமல்லபுரம் வந்தனர்.
 அவர்கள் ஐந்துரதம், அர்ஜுனன் தபசு , கடற்கரைக்கோயில், வெண்ணெய் உருண்டைப்பாறை ஆகிய இடங்களைப் பார்வையிட்டு புகைப்படங்கள் எடுத்தனர்.
 இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
 இதைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினர் மாமல்லபுரத்தின் சுற்றுலாப் பகுதிகளைப் பார்வையிட்டனர். மாநிலச் செயலர் கே.டி.ராகவன், மாவட்டத் தலைவர் சிவ. செந்தமிழரசு, மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர், முன்னாள் மாவட்டத் தலைவர் பலராமன், நகரத் தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com