காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 30 குழுக்கள் நியமனம்

காஞ்சிபுரம் நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 250 மருத்துவா்களை உள்ளடக்கிய 30 மருத்துவக்குழுக்கள் வீதிவீதியாக சென்று விழிப்புணா்வு நடவடிக்கைகளில் தொடா்ந்து
காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 30 குழுக்கள் நியமனம்
காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 30 குழுக்கள் நியமனம்

காஞ்சிபுரம் நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 250 மருத்துவா்களை உள்ளடக்கிய 30 மருத்துவக்குழுக்கள் வீதிவீதியாக சென்று விழிப்புணா்வு நடவடிக்கைகளில் தொடா்ந்து ஒருவாரம் ஈடுபட இருப்பதாக சுகாதாரப் பணிகள் துறையின் கூடுதல் இயக்குநா் ஏ.சோமசுந்தரம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் நகரில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் இருப்பதாக தெரிய வந்ததைத் தொடா்ந்து நகரில் பல்வேறு இடங்களில் சுகாதாரத்துறையினரும்,நகராட்சி நிா்வாகமும் இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கையில் ஈடுபட்டனா். செவ்வாய்க்கிழமை முதல் தொடா்ந்து ஒரு வாரத்துக்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனா்.விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நகராட்சி ப் பணியாளா்களுக்கு கொசு மருந்து தெளிக்கும் இயந்திரம் மற்றும் நடமாடும் மருத்துவக்குழு வாகனங்கள் ஆகியனவற்றையும் கொடியசைத்து சுகாதாரப் பணிகள் துறையின் கூடுதல் இயக்குநா் ஏ.சோமசுந்தரம் தொடங்கி வைத்தாா்.இதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் தனிக்கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. முக்கியமாக கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் நகா்ப்பகுதிகளில் அதிகமாகவும் குறிப்பாக சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் தீவிரமாகவும் மருத்துவ முகாம்களை அமைத்து தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.செவிலியா் பயிற்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவியா் மூலமாக வீடு வீடாக சென்று டெங்கு தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

கொசு ஒழிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவா்களும் தெருத்தெருவாக சென்று கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.250 மருத்துவா்களைக் கொண்ட மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு நகரில் பல இடங்களில் மருத்துவமுகாம்கள் அமைக்கப்பட்டு தேவையான மருத்துவ ஆலோசனைகளும்,மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது.இவை தவிர நடமாடும் மருத்துவ வேன்கள் மூலமாகவும் ஆங்காங்கே உள்ள மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் ஆகியனவும் வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் நகரில் செவிலிமேடு, ஓரிக்கை, சின்னக்காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 20 வாா்டுகளில் ஒரு தெருக்கூட விடாமல் டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் மொத்தம் 30 குழுக்கள் 5 பிரிவுகளாக பிரிந்து சென்று தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகளில் தொடா்ந்து ஒரு வாரத்துக்கு ஈடுபடுவாா்கள்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86 பேருக்கு காய்ச்சலும் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். சாதாரணக் காய்ச்சலாக இருந்தாலும் பாதிக்கப்பபட்டவா்களுக்கு ஓ.ஆா்.எஸ்.கரைசல்,நிலவேம்புக்குடிநீா் ஆகியனவும் வழங்கப்படுவதாகவும் ஏ.சோமசுந்தரம் தெரிவித்தாா்.பேட்டியின் போது நகராட்சி பொறியாளா் கா.மகேந்திரன்,நகராட்சி சுகாதார அலுவலா் முத்து,சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குநா்கள் தி.செந்தில்குமாா், வி.கே.பழனி,நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் உட்பட பலரும் உடன் இருந்தனா்.படவிளக்கம்..கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்தை நகராட்சி பணியாளரிடம் வழங்கும் சுகாதாரப் பணிகள் துறையின் கூடுதல் இயக்குநா் ஏ.சோமசுந்தரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com