மகளிர் சுய உதவிக்குழு கடன் வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கும் கடன் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் புதன்கிழமை
மகளிர் சுய உதவிக்குழு கடன் வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு


மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கும் கடன் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் புதன்கிழமை தெரிவித்தார். 
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கலந்தாய்வுக் கூட்ட அரங்கில்  நடைபெற்ற கடன் வழங்கும் விழாவிற்குத் தலைமை வகித்து 36 பயனாளிகளுக்கு ரூ.38.71லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி அவர் மேலும் பேசியது:
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வந்ததை தற்போது உயர்த்தி ரூ.10 லட்சம் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. கடன் வாங்கியவர்கள் அக்கடனை முறையாக திருப்பிச் செலுத்தினால் மட்டுமே ரூ.10 லட்சம் வரை கடனுதவி பெற முடியும்.
மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் பண்ணை சாராக் கடன், சிறு வணிகக் கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் என பலவகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்தினால் வாழ்வு மேம்படும்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி பெண்கள் நலன் மேம்படக் காரணமாக இருந்தார். 
அவரால் உருவாக்கப்பட்டத் திட்டங்களை அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றார் அவர். 
விழாவில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ப.லோகநாதன், துணைத் தலைவர் டி.பானுபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொதுமேலாளர்  விஜயகுமாரி வரவேற்றார். 
இதில் வங்கியின் இயக்குநர்கள் கிருஷ்ணமூர்த்தி, கே.எஸ்.ரவிச்சந்திரன், ஆதனூர் பக்தவத்சலம் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக வங்கியின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com