ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போந்தூரில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே
ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


போந்தூரில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் நிரந்தர தொழிலாளர்கள் 500 பேரும், ஒப்பந்த மற்றும் பயிற்சி தொழிலாளர்கள் 500 பேரும் பணியாற்றி வருகின்றனர். 
இந்த நிலையில், இத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் செங்கை அண்ணா ஜனநாயக தொழிலாளர்கள் சங்கம் என்ற சங்கத்தை கடந்த மாதம் தொடங்கியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர், பல தொழிலாளர்களை பணிக்கு வர விடாமல் தடுத்து, ஊதிய உயர்வை ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 
இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 31-ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிகளில் தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வெளிமாநில தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்தி வரும் தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்தும், நிரந்தர தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தியும் ஆக. 26-ஆம் தேதி  முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக வெள்ளிக்கிழமை ஸ்ரீபெரும்புதூர் பேருந்துநிலையம் அருகே 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தொழிலாளர்கள் நலத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com