கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகள் அரசுக்குப் பெருமை சேர்க்கும்: அமைச்சர்  பா.பென்ஜமின்  

கூட்டுறவுச் சங்கங்கள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து தமிழக அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு வருவதாக தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் சனிக்கிழமை காஞ்சிபுரத்தில்

கூட்டுறவுச் சங்கங்கள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து தமிழக அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு வருவதாக தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் சனிக்கிழமை காஞ்சிபுரத்தில் பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சார்பில் பொதுப்பேரவைக் கூட்டம் ஏ.கே.ஜி. திருமண  மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத்.பா.கணேசன் தலைமை வகித்தார். மத்தியக் கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளர் ஜி.ராஜேந்திரன், துணைப்பதிவாளர்ஆர்.ஜெகன்சிங் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலாண்மை இயக்குனர் பா.ஜெயஸ்ரீ வரவேற்றார். பேரவைக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் பேசியது:
தமிழகத்தை சிறந்த மாநிலமாக ஆக்கிட முதல்வர் எடப்பாடி  கே.பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு கட்டமாகவே வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி அதிக லாபம் ஈட்டும் வகையில் செயல்பட்டாலும் மக்கள் நலன் சார்ந்த 48 வகையான தீர்மானங்களை இப்பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றியிருக்கிறது. கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகள் தமிழக அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.
கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் தமிழகத்தில் சிறப்பாகவும்,கண்ணியமாகவும் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. தமிழக அரசு விவசாயிகள், கூட்டுறவுச் சங்கத் தொழிலாளர்கள் ஆகியோர் நலனைப் பாதுகாப்பதிலும் கவனமாக இருந்து வருவதாகவும் அவர் கூறினார். பின்னர் பல்வேறு கூட்டுறவுச்சங்க நிர்வாகிகளுக்கு ஊக்கத்தொகையையும் காசோலையாக அமைச்சர் வழங்கினார்.
இதில்  கூட்டுறவுச் சங்க இணைப்பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகரன், இணைப்பதிவாளர் எஸ்.பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் துணைத் தலைவர் பி.டி.பானுபிரசாத் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com