மல்லியங்கரணை, பசுவங்கரணையில் அம்மா திட்ட முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகேயுள்ள மல்லியங்கரணையில் அம்மா திட்ட முகாம் வட்டாட்சியர் சாந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மல்லியங்கரணை, பசுவங்கரணையில் அம்மா திட்ட முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகேயுள்ள மல்லியங்கரணையில் அம்மா திட்ட முகாம் வட்டாட்சியர் சாந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு தனி வட்டாட்சியர் ஞானவேல், வருவாய் ஆய்வாளர் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சண்முகப்பிரியா வரவேற்றார். 
இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றுதல், திருமண உதவித் தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 252 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் உடனடி நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்த முகாமில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மதுராந்தகத்தில்...
மதுராந்தகத்தை அடுத்த பசுவங்கரணை கிராமத்தில் அம்மா திட்டமுகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமிற்கு மதுராந்தகம் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் என்.பர்வதம் தலைமை வகித்தார்.  இதில் பொதுமக்களிடமிருந்து 34 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதில் 10 மனுக்கள் ஏற்கப்பட்டது.
14 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. இதர 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் மாலதி, கிராம நிர்வாக அதிகாரி சாந்திமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் வருவாய்த் துறையினர் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com