சீன அதிபர், இந்திய பிரதமர் வருகை: மாமல்லபுரத்தில் தலைமைச் செயலர், டிஜிபி ஆய்வு

மாமல்லபுரத்துக்கு சீன அதிபர், இந்திய பிரதமர் வருவதை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் 2-ஆம் முறையாக தமிழக தலைமைச் செயலர்கே. சண்முகம், டிஜிபி ஜே.கே. திரிபாதி ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
சீன அதிபர், இந்திய பிரதமர் வருகை: மாமல்லபுரத்தில் தலைமைச் செயலர், டிஜிபி ஆய்வு

மாமல்லபுரத்துக்கு சீன அதிபர், இந்திய பிரதமர் வருவதை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் 2-ஆம் முறையாக தமிழக தலைமைச் செயலர்கே. சண்முகம், டிஜிபி ஜே.கே. திரிபாதி ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்துக்கு அக்டோபர் 11-ஆம் தேதி வருகை தரவுள்ளனர். இதையொட்டி, மாமல்லபுரத்தில் மாவட்ட நிர்வாகம், காவல் துறை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம், வருவாய், காவல், தொல்லியல், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்பு அகற்றுதல் , சாலைகள் சீரமைத்தல், சிற்பங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்நிலையில், கடந்த வாரம் தமிழக தலைமைச் செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, 25-ஆம் தேதி மத்திய சிறப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், 2-ஆம் கட்டமாக தமிழக தலைமைச் செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அர்ஜுனன் தபசு, ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைப் பாறை,  கடற்கரைக் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு  மேற்கொண்டனர். ஐந்துரதம், அர்ஜுனன் தபசு, கடற்கரைக் கோயில் பகுதிகளை மேலும் அழகுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், கடற்கரைக் கோயில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சுற்றுலா அலுவலர் சக்திவேல்,  திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் தங்கராஜ், பேரூராட்சி செயலர் லதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, மாமல்லபுரம் காவல் நிலையத்தில் டிஜிபி திரிபாதி, கூடுதல் டிஜிபி ஜெயந்த்முரளி, டிஐஜிக்கள் தேன்மொழி, நிர்மல்குமார், காஞ்சிபுரம் மாவட்டக் காவல்  கண்காணிப்பாளர் கண்ணன், கூடுதல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாமல்லபுரம் ஆய்வாளர் ரவிக்குமார் உள்ளிட்ட போலீஸார் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com