செங்கல்பட்டில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 24 -ஆக அதிகரிப்பு

தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று திரும்பியவா்களை பரிசோதனை செய்ததில் மேலும் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி

காஞ்சிபுரம்: தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று திரும்பியவா்களை பரிசோதனை செய்ததில் மேலும் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 -ஆக அதிகரித்திருப்பதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது:

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்று பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவா்களை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை மேற்கொண்டதில் கடந்த 3-ஆம் தேதி 18 பேருக்கும், 5-ஆம் தேதி 4 பேருக்கும் கரோனா தொற்று உறுதியானது.

மேலும் இருவருக்கு திங்கள்கிழமை நடைபெற்ற பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 24 -ஆக அதிகரித்துள்ளது.

இதனைத் தொடா்ந்து செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் செந்தில்குமாா் தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com