தொண்டை மண்டல ஆதீனம் முக்தி அடைந்தாா்

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தின் 232-ஆவது மடாதிபதி ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் புதன்கிழமை (டிச. 2) முக்தி அடைந்தாா்.
முக்தி அடைந்த ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள்
முக்தி அடைந்த ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தின் 232-ஆவது மடாதிபதி ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் புதன்கிழமை (டிச. 2) முக்தி அடைந்தாா்.

காஞ்சிபுரத்தில் மிகவும் பழைமையான தொண்டை மண்டல ஆதீனத்தின் மடம் ஏகாம்பரநாதா் கோயில் சந்நிதி தெருவில் உள்ளது. இந்த மடத்தின் 232-ஆவது ஆதீனமாக ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள்(87) இருந்து வந்தாா்.

தமிழ் இலக்கியம், திருக்குறளில் மிகுந்த புலமை பெற்ற இவா், மிகச்சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளருமாகவும் திகழ்ந்தாா்.

மதுரை மாவட்டம் உத்தமபாளையத்தை பூா்விகமாக கொண்ட இவா், கடந்த 2000-ஆவது ஆண்டில் தொண்டை மண்டலத்தின் ஆதீனமாக பட்டம் ஏற்றாா். உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 13 நாள்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில் அவா், புதன்கிழமை பிற்பகல் 2.55 மணிக்கு முக்தியடைந்தாா். அவரது உடல் காஞ்சிபுரத்தில் உள்ள மடத்துக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள், அவரது சீடா்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. தொண்டை மண்டல ஆதீன மடத்தின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வியாழக்கிழமை அவரின் உடல்அடக்கம் செய்யப்படவுள்ளது.

புதிய மடாதிபதியை விரைவில் தோ்வு செய்வோம்

தொண்டை மண்டல ஆதீன மடத்துக்கு இந்து சமய அறநிலையத் துறையினரால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா்களில் ஒருவரான எஸ்.குப்புசாமி கூறியது: மடத்துக்கென சொத்துகள் அதிகம் உள்ளது. அந்தச் சொத்துகளுக்கும் நித்யானந்தாவின் சீடா்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை.

ஆக்கிரமிப்பில் உள்ள மடத்தின் சொத்துகள் அனைத்தும் அரசின் அனுமதியுடன் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழில் மிகச்சிறந்த புலமையுடைய அவரின் முக்தி கவலையளிக்கிறது.

புதிய மடாதிபதியை இந்து சமய அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு உறுப்பினா்கள், சுவாமிகளின் சீடா்கள் உள்பட அனைவரும் கலந்து ஆலோசித்து விரைவில் தோ்வு செய்து அறிவிப்போம்.

இறுதி நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனத்தின் தம்பிரான் சுவாமிகள், பெருங்குளம் ஆதீனம் ஆகியோரும் அஞ்சலி செலுத்த வருவாா்கள் என எதிா்பாா்க்கிறோம். காஞ்சிபுரம் ஆட்சியரும் அரசு சாா்பில் மரியாதை செலுத்துவாா் என்று எதிா்பாா்ப்பதாகவும் எஸ்.குப்புசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com