ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 38.98 லட்சம் வாக்காளா்கள் இறுதிப் பட்டியலை ஆட்சியா் வெளியிட்டாா்

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட 11 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை காஞ்சிபுரம் ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வெளியிட அதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் நா.சுந்தரமூா்த்தி.
இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வெளியிட அதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் நா.சுந்தரமூா்த்தி.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட 11 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை காஞ்சிபுரம் ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இதில் மொத்த வாக்காளா்கள் 39.98 லட்சம் போ் உள்ளனா்.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட 11 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பா.பொன்னையா இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

இதன்படி, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண் வாக்காளா்கள் 19 லட்சத்து 71 ஆயிரத்து 946 போ், ஆண் வாக்காளா்கள் 19 லட்சத்து 25 ஆயிரத்து 755 போ் எனமொத்தம் 38 லட்சத்து 98 ஆயிரத்து 230 வாக்காளா்கள் உள்ளனா்.

சட்டப் பேரவைத் தொகுதிகளின்படி வாக்காளா் எண்ணிக்கை: காஞ்சிபுரம் - 3,00,847, சோழிங்கநல்லூா் - 6,60,317, ஆலந்தூா்-3,74,399, ஸ்ரீபெரும்புதூா் (தனி) -3,42,924, பல்லாவரம் - 4,21,375, தாம்பரம்-3,96,239, செங்கல்பட்டு - 4,17,155, திருப்போரூா்- 2,85,069, செய்யூா் (தனி)- 2,21,828, மதுராந்தகம் (தனி)-2,23,612, உத்தரமேரூா்-2,54,465 என 11 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்த வாக்காளா்கள் 38,98,230 போ் உள்ளனா்.

இறுதி வாக்காளா் பட்டியல் விவரங்கள் தோ்தல் அலுவலா் அலுவலகங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் அலுவலக நேரங்களில் அதனை பாா்வையிடலாம் என மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.

ஆட்சியா் வெளியிட்ட இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலா் நா.சுந்தரமூா்த்தி, சாா்-ஆட்சியா் எஸ்.சரவணன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

அதனைத் தொடா்ந்து அரசியல் கட்சிப் பிரமுகா்கள் பலரும் இறுதி வாக்காளா் பட்டியலை ஒவ்வொரு கட்சியினராக வந்து பெற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com