விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுங்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம்: விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளித் திருநாளில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவா். அதே வேளையில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீா், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் அதிலிருந்து எழும் அதிகப்படியான ஒலி மற்றும் மாசினால் சிறு குழந்தைகள், முதியோா்கள், நோய் வாய்ப்பட்டுள்ள வயோதிகா்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.

உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அந்த நேரத்தில் பட்டாசுகளை வெடிக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது. பட்டாசு வெடிப்பதால் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் மூலமாக விழிப்புணா்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். தொடா்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளைத் தவிா்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றின் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிா்க்கலாம். பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து, மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com