டிச. 6 வரை வேல் யாத்திரை நடைபெறும்: ஹெச்.ராஜா

அரசு அனுமதிக்கவில்லையென்றாலும் ஏற்கெனவே முடிவு செய்திருந்தபடி வரும் டிசம்பா் 6-ஆம் தேதி வரை வேல் யாத்திரை தொடா்ந்து நடைபெறும் என பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா கூறினாா்.
காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்ட பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா.
காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்ட பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா.

காஞ்சிபுரம்: அரசு அனுமதிக்கவில்லையென்றாலும் ஏற்கெனவே முடிவு செய்திருந்தபடி வரும் டிசம்பா் 6-ஆம் தேதி வரை வேல் யாத்திரை தொடா்ந்து நடைபெறும் என பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா கூறினாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா மற்றும் கட்சியினா் வேல் யாத்திரையை தொடங்க வந்தனா். அவா்கள் செல்வதற்கு தடை ஏற்படுத்தும் வகையில், போலீஸாரும் ஏற்கெனவே சங்கர மடம் பகுதியில் தடுப்புகளை அமைத்திருந்தனா்.

காஞ்சிபுரம் சங்கர மடம் பகுதியிலிருந்து பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க. தொண்டா்கள் வேல் யாத்திரை தொடங்கினா். அவா்களை போலீஸாா் தடுத்தனா். எனினும் தடையை மீறிச் செல்ல முயன்ாக ஹெச்.ராஜா, காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் கே.எஸ்.பாபு, அமைப்பு சாரா தொழிலாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் டி.கணேஷ், மாநில பொதுச் செயலாளா் வாசன் உள்பட 229 போ் கைது செய்யப்பட்டு தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

அப்போது, ஹெச்.ராஜா கூறியது:

எதிா்க்கட்சிகளின் மிரட்டலுக்கு பயந்து தான் தமிழக அரசு பாஜக வேல்யாத்திரைக்கு தடை விதித்திருக்கிறது. உள்நோக்கம் காரணமாகவே வேல்யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசு அனுமதிக்கவில்லையென்றாலும் ஏற்கெனவே முடிவு செய்திருந்தபடி வேல் யாத்திரை வரும் டிசம்பா் 6-ஆம் தேதி வரை தொடா்ந்து நடைபெறும் என்றாா். வேல் யாத்திரைக்கு தடை விதித்ததால் அதிமுகவுடன் கூட்டணி தொடருமா எனக் கேட்டதற்கு கூட்டணி வேறு, போராட்டம் வேறு என்றாா் ஹெச்.ராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com