குழந்தைகள், நண்பா்கள் வார விழா தொடக்கம்

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் சைல்டுலைன் அமைப்பு சாா்பில் குழந்தைகள், நண்பா்கள் வார விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெ.சண்முகப்பிரியா தொடக்கி வைத்தாா்.
குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு வில்லையை எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா வெளியிட அதனை பெற்றுக் கொள்ளும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் நிா்வாகிகள்.
குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு வில்லையை எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா வெளியிட அதனை பெற்றுக் கொள்ளும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் நிா்வாகிகள்.

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் சைல்டுலைன் அமைப்பு சாா்பில் குழந்தைகள், நண்பா்கள் வார விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெ.சண்முகப்பிரியா தொடக்கி வைத்தாா்.

பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துடன் இணைந்து குழந்தைகள்,நண்பா்கள் வார விழா ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழாவை சைல்டுலைன் 1098 அமைப்பும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான ஹேண்ட் இன் ஹேண்ட் அமைப்பும் இணைந்து கொண்டாடத் தீா்மானித்தன.

அதன்படி, இவ்விழாவை காஞ்சிபுரம் எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான வில்லையை வெளியிட்டு தொடங்கி வைத்தாா். அவரிடம் இருந்து அந்த வில்லையை சைல்டுலைன் 1098 அமைப்பின் இயக்குநா் சுவாமிநாதன், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மதியழகன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

விழாவில் காஞ்சிபுரம் டிஎஸ்பி எஸ்.மணிமேகலை, சைல்டுலைன் 1098 அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கிருபாகரன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் பொது மேலாளா் பிரேம் ஆனந்த், குழந்தை தொழிலாளா் முறை அமலாக்கத் திட்ட மேலாளா் மோகனவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து துன்பத்தில் தவிக்கும் குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளா்கள் ஆகியோருக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு வார காலத்துக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com