நிவர் புயல்: ஸ்ரீபெரும்புதூர், பென்னலூர் ஏரிகளில் பொதுப்பணித்துறையினர் ஆய்வு

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேகமாக நிரம்பி வரும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான ஸ்ரீபெரும்புதூர் ஏரி, பென்னலூர் ஏரியில் பொதுப்பணித்துறையினர் ஆய்வு நடத்தினர்.
ஸ்ரீபெரும்புதூர், பென்னலூர் ஏரிகளில் பொதுப்பணித்துறையினர் ஆய்வு
ஸ்ரீபெரும்புதூர், பென்னலூர் ஏரிகளில் பொதுப்பணித்துறையினர் ஆய்வு

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேகமாக நிரம்பி வரும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான ஸ்ரீபெரும்புதூர் ஏரி, பென்னலூர் ஏரியில் பொதுப்பணித்துறையினர் ஆய்வு நடத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான ஸ்ரீபெரும்புதூர் ஏரி 800 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த ஏரிநீரை பயன்படுத்தி இப்பகுதியில் சுமார் 1400 ஏக்ர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான ஸ்ரீபெரும்புதூர் ஏரியின் முழு கொள்ளளவான 174.10 மில்லியன் கன அடியில் தற்போது 154.28 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கனஅடிக்கு மேல் உள்ளதால் ஸ்ரீபெரும்புதூர் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

இந்தநிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேகமாக நிரம்பி வரும் ஸ்ரீபெரும்புதூர்  ஏரி மற்றும் பென்னலூர் ஏரிகளை செவ்வாய்க்கிழமை பொதுப்பணித்துறை கீழ்பாலாறு வடிநிலகோட்ட செயற்பொறியாளர் ரமேஷ், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மார்கண்டன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் ஏரியின் கரைகளின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மார்கண்டன் தனது அலுவலக ஊழியர்களுடன் ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் படகில் சென்று பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com