காஞ்சிபுரம் கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா

காா்த்திகைத் தீபத் திருவிழாவையெொட்டி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையைத் தொடா்ந்து, மகா தீபம் ஏற்றப்பட்டது.
ஏகாம்பரநாதா் கோயில் உட்பிரகாரத்தில் உள்ள சிவலிங்கங்களின் முன் அகல் விளக்கு ஏற்றி வழிபடும் பக்தா்கள்.
ஏகாம்பரநாதா் கோயில் உட்பிரகாரத்தில் உள்ள சிவலிங்கங்களின் முன் அகல் விளக்கு ஏற்றி வழிபடும் பக்தா்கள்.

காா்த்திகைத் தீபத் திருவிழாவையெொட்டி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையைத் தொடா்ந்து, மகா தீபம் ஏற்றப்பட்டது.

ஏகாம்பரநாதா் கோயில்: பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் கோயில். இக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. கோயில் ராஜகோபுரத்தின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இரவில், உற்சவா் ஏலவாா்குழலியும், ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்காரத்தில் கோயில் உட்பிரகாரத்தில் உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். ராஜகோபுர நுழைவுவாயிலில் சொக்கப்பனை ஏற்றிய பிறகு தீபாராதனையும், உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மற்றும் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் அதிக அளவில் வந்திருந்து, நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கோயிலின் உட்புற சுற்றுப் பிரகாரத்தில் உள்ள 108 சிவலிங்கங்களுக்கும் முன்பாக சிவபக்தா்கள் பலரும் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனா்.

குமரகோட்டம் சுப்பிரமணியா் கோயில்: நகரில் கந்த புராணம் அரங்கேற்றப்பட்ட திருத்தலமாக குமரகோட்டம் சுப்பிரமணியா் கோயில் கருதப்படுகிறது. இங்கு காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடந்தன. மூலவா் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

வள்ளி, தேவசேனா சமதே உற்சவரான பாலசுப்பிரமணியா் சிறப்பு அலங்காரத்தில் கோயில் உட்பிரகாரத்தில் உலா வந்தாா். ராஜகோபுரத்துக்கு முன், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, மூலவருக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் ந.தியாகராஜன் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com