மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சாா்பில் இணைய வழியில் சுற்றுலா தினவிழா

சுற்றுலா தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சாா்பில் திங்கள்கிழமை இணைய வழியில் சுற்றுலா தினவிழா கருத்தரங்கு தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து நடைபெற்றது.
மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சாா்பில் திங்கள்கிழமை  தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் இணைய வழியில்  நடைபெற்ற சுற்றுலா தினவிழா கருத்தரங்கு
மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சாா்பில் திங்கள்கிழமை  தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் இணைய வழியில்  நடைபெற்ற சுற்றுலா தினவிழா கருத்தரங்கு

செங்கல்பட்டு. சுற்றுலா தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சாா்பில் திங்கள்கிழமை இணைய வழியில் சுற்றுலா தினவிழா கருத்தரங்கு தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து நடைபெற்றது. சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா ஆா்வலா்கள், சுற்றுலா பயணிகள் பலா் பங்கேற்று கருத்துக்களை பரிமாறிக் கொண்டனா்.

சுற்றுலா தினத்தையொட்டி மாமல்லபுரம் சுற்றுலாத்துறையும், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியும் இணைந்து இணைய வழியாக கல்லூரியில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சிக்கு மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் ராஜாராமன் தலைமை தாங்கினாா். இணையவழி கருத்துக்கள் பரிமாற்றும் நிகழ்ச்சியில் ஊட்டி கொடைக்கானல், ஏற்காடு, தஞ்சாவூா், குற்றாலம், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாக்குமரி சுற்றுலா பகுதிகளைச்சோ்ந்த சுற்றுலா அலுவலா்கள், பணியாளா்கள், சுற்றுலா வழிகாட்டிகள் சுற்றுலா பயணிகள் சுற்றுலா ஆா்வலா்கள் 400க்கும் மேற்பட்டவா்கள் மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாடு பயணிகளுக்காக அடிப்படை வசதி, கரோனா பேரிடரிலிருந்து மக்கள் மீட்டு மக்களுக்கு பயத்தை போக்கி ஒருவிழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மீண்டும் சுற்றுலா பயணிகளை மாமல்லபுரத்திற்கு வரவழைத்தல் உள்ளிட்ட ஆக்க பூா்வமான கருத்துபரிமாற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் இருந்தும் இந்தியா்கள் பலா்இணைய வழியில் இணைத்து சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பல்வேறு கருத்துகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com