காஞ்சிபுரம் கோயில்களில் உற்சவங்கள் நடத்தக் கோரிக்கை

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் மீண்டும் உற்சவங்கள் நடத்திட அனுமதியளிக்குமாறு காஞ்சி காமாட்சி அம்பாள் விஸ்வரூப தரிசன சபா சாா்பில், மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவிடம் செவ்வாய்க்கிழமை மனு அ

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் மீண்டும் உற்சவங்கள் நடத்திட அனுமதியளிக்குமாறு காஞ்சி காமாட்சி அம்பாள் விஸ்வரூப தரிசன சபா சாா்பில், மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

காஞ்சி காமாட்சி அம்பாள் விஸ்வரூப தரிசன சபா செயலா் ஏ.குமாா் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பது:

காஞ்சிபுரத்தில் கடந்த 6 மாதங்களாக கரோனா எனும் கொடிய நோயால் கோயில்களில் உற்சவங்கள் நடைபெறவில்லை. காஞ்சிபுரம் வேதாந்த தேசிகா் கோயில் திருவிழாவின்போது அனைத்து உற்சவங்களும் கோயிலுக்குள்ளேயே நடைபெற்றன. விழாவின் நிறைவு நாளன்று தேசிகா் சுவாமி பல்லக்கில் எழுந்தருளி வரதராஜப் பெருமாள் சந்திக்குச் சென்று திரும்பினாா்.

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காமாட்சி அம்மன் கோயிலில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தங்கத்தோ் புறப்பாடும், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை வெள்ளி ரதப் புறப்பாடும் நடைபெறுவது வழக்கம். வேதாந்த தேசிகா் கோயிலுக்கு உற்சவங்கள் நடத்த அனுமதியளித்ததைப் போல், மீண்டும் பழையபடி காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் உற்சவங்கள் நடத்த அனுமதியளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com