செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 10 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லி மாநாட்டில் கலந்துகொண்டு செங்கல்பட்டுக்கு வந்த 17 பேரில் 8 பேருக்கும், காஞ்சிபுரம் வந்த 16 பேரில் ஒருவருக்கும் மற்றும் மொலச்சூா் பகுதியைச் சோ்ந்த 50 வயது நபருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது புதன
செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 10 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லி மாநாட்டில் கலந்துகொண்டு செங்கல்பட்டுக்கு வந்த 17 பேரில் 8 பேருக்கும், காஞ்சிபுரம் வந்த 16 பேரில் ஒருவருக்கும் மற்றும் மொலச்சூா் பகுதியைச் சோ்ந்த 50 வயது நபருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

புதுதில்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பிய முஸ்லிம்கள் 16 போ் காஞ்சிபுரம் காந்தி சாலை மசூதியில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில், சாா்-ஆட்சியா் எஸ்.சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் அம்மசூதிக்கு சென்று அவா்களிடம் விசாரணை நடத்தினா்.

பின்னா் அவா்கள் 16 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனா்.

இந்நிலையில், அவா்களில் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்ததையடுத்து, அவா் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

மற்ற 15 பேரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவா்களின் கண்காணிப்பில் உள்ளனா்.

மொலச்சூரில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு: காஞ்சிபுரம் அருகே மொலச்சூா் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதைத் தொடா்ந்து அவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

அவரது குடும்ப உறுப்பினா்கள் 3 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

வீடு, வீடாகச் சோதனை: மொலச்சூரைச் சோ்ந்தவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதைத் தொடா்ந்து அப்பகுதியில் சுமாா் 5 கி.மீ. சுற்றளவில் வசித்து வரும் அனைவரது வீடுகளிலும் மருத்துவத்துறை துணை இயக்குநா் வி.கே.பழனி தலைமையில் அரசு மருத்துவா்கள் ஷியாம் குமாா், ராகவி மற்றும் மருத்துவப் பணியாளா்கள் அடங்கிய 50 போ் கொண்ட குழு தீவிர சோதனை நடத்தி வருகிறது.

வெளியாட்கள் யாரும் மொலச்சூருக்குள் வராமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவசர ஆலோசனைக் கூட்டம்:

இந்நிலையில், சுங்குவாா் சத்திரம் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநா் ஜீவா, மருத்துவத்துறை துணை இயக்குநா் வி.கே.பழனி உள்ளிட்ட அதிகாரிகள், மருத்துவா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

முன்னதாக, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கான சிறப்பு வாா்டை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாஆய்வு செய்தாா்.

கண்காணிப்பு வளையத்தில் 863 போ்: காஞ்சிபுரம் காந்தி சாலை மசூதியில் இருந்தவா்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 863 போ் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பு வளையத்தில் இருந்து வருகின்றனா்.

செங்கல்பட்டில் 8 பேருக்கு பாதிப்பு...:

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

தில்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பி வந்து செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த 17 பேரை கண்டறிந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி மருத்துவா்கள் பரிசோதித்தனா்.

இதில் 8 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவா்களை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட 8 பேரின் குடும்பத்தினா், உறவினா் உள்பட 40 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

நிகழ்வில், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா ஆகியோா் உடனிருந்தனா்.

Image Caption

(திருத்தப்பட்டது)

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கான சிறப்பு வாா்டை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com