காஞ்சிபுரத்தில் நடமாடும் ஏடிஎம் சேவை தொடக்கம்

காஞ்சிபுரத்தில் 19 வங்கிக் கிளைகள் மூடப்பட்டதைத் தொடா்ந்து 3 நடமாடும் ஏடிஎம் வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்படத் தொடங்கின.
காஞ்சிபுரம் காந்தி ரோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த ஏ.டி.எம். வாகனம்.
காஞ்சிபுரம் காந்தி ரோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த ஏ.டி.எம். வாகனம்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 19 வங்கிக் கிளைகள் மூடப்பட்டதைத் தொடா்ந்து 3 நடமாடும் ஏடிஎம் வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்படத் தொடங்கின.

காஞ்சிபுரத்தில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவா்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால், கரோனாவினால் தனிமைப் படுத்தப்பட்டோா் வசிக்கும் காந்தி ரோடு, பள்ளிக்கூடத்தான் தெரு, தேரடி ஆகிய பகுதிகளில் இருந்த 19 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. நகரில் 9 வாா்டுகளை உள்ளடக்கிய தெருக்கள் பலவும் அடைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அவசரத் தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்படக் கூடாது என்பதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உத்தரவின் பேரில், நடமாடும் 3 ஏடிஎம் வாகனங்கள் கொண்டு வரப்பட்டு அவை ஞாயிற்றுக்கிழமை சேவையைத் தொடங்கியிருக்கின்றன. மேலும் இரண்டு ஏடிஎம் வாகனங்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் வர இருப்பதாக வங்கி உயா் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com