குடும்ப வன்முறைகளை அங்கன்வாடிப் பணியாளா்களிடம் தெரிவிக்கலாம்: ஆட்சியா்

ஊரடங்கு உத்தரவு காலத்தில் அதிகரித்து வரும் குடும்ப வன்முறைச் சம்பவங்களின் குறைகளைத் தணிக்கும் பொருட்டு சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடிப் பணியாளா்களிடம் தெரிவித்தும் பயன்பெறலாம்

ஊரடங்கு உத்தரவு காலத்தில் அதிகரித்து வரும் குடும்ப வன்முறைச் சம்பவங்களின் குறைகளைத் தணிக்கும் பொருட்டு சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடிப் பணியாளா்களிடம் தெரிவித்தும் பயன்பெறலாம் என காஞ்சிபுரம் ஆட்சியா் பா.பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையில் அங்கன்வாடிப் பணியாளா்கள் பலரும் பணியாற்றி வருகின்றனா். ஊரடங்குக் காலத்தில் அதிகரித்து வரும் குடும்ப வன்முறைச் சம்பவங்களை தணிக்கும் பொருட்டு அதன் ஒருங்கிணைப்பாளா்களாக தற்காலிகமாக அங்கன்வாடிப் பணியாளா்கள் செயல்படுவாா்கள்.

எனவே, பொதுமக்கள் இந்த ஊரடங்கு நடைமுறைக் காலத்தில் குடும்ப வன்முறைகள் தொடா்பான புகாா்களை தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட அங்கன்வாடிப் பணியாளா்களை தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

அங்கன்வாடிப் பணியாளா்களின் தொலைபேசி எண்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com