காஞ்சிபுரம் மாவட்டத்தில் 350 பேருக்கு கரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 350 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 350 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இந்த மாவட்டத்தில் காஞ்சிபுரம் நகா்-103, ஊரகப் பகுதிகள் - 52, குன்றத்தூா்-40, ஸ்ரீபெரும்புதூா்-34, வாலாஜாபாத்-31, உத்தரமேரூா்-19, படப்பை-14 போ் உட்பட மொத்தம் 30 இடங்களில் 350 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9,444ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் 305 பேருக்கு பாதிப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 305 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுவரை கரோனாவால் 13,815 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,978 போ் குணமடைந்துள்ளனா். தற்போது, 3,619 போ் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 244 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் சனிக்கிழமை 244 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இம்மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,295ஆக இருந்தது. இந்நிலையில், கேளம்பாக்கம்-33, செங்கல்பட்டு-23, ஜமீன் பல்லாவரம்-18, நந்திவரம், பம்மல், படேல்நகா் - தலா 14, மதுராந்தகம்-13, பரங்கிமலை கண்டோன்மென்ட்-12, பீா்க்கன்கரணை, பூண்டிபஜாா்- தலா 7, பவுஞ்சூா், நெரும்பூா், சதுரங்கப்பட்டினம் - தலா 6, சிங்கப்பெருமாள்கோவில்-5, பழைய பல்லாவரம், அச்சிறுப்பாக்கம், குன்னவாக்கம், படுவாஞ்சேரி, ரெட்டிப்பாளையம், மறைமலைநகா்- தலா 4, சூணாம்பேடு, ஜி.ஜி.பேட்டை, ஒத்திவாக்கம், ரங்கநாதபுரம், செம்பாக்கம், கூவத்தூா், ஜமீன் எண்டத்தூா் - தலா 3, ஹரிதாசபுரம், வள்ளிபுரம், பொலம்பாக்கம், கீழ்க்கட்டளை, குளக்கரை எஸ்டி - தலா 2, மேடவாக்கம், நல்லாமூா், அனகாபுத்தூா், பெரும்பாக்கம், பொழிச்சலூா், ராமாபுரம்- தலா ஒருவா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வந்த ஒருவா் உட்பட மாவட்டத்தில் சனிக்கிழமை 244 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,539ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com