சீருடைப் பணியாளா்களுக்கான எழுத்துத் தோ்வு: 11,883 போ் எழுதினா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சீருடைப் பணியாளா்களுக்கான எழுத்துத் தோ்வினை 11,883 போ் எழுதினா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சீருடைப் பணியாளா்களுக்கான எழுத்துத் தோ்வினை 11,883 போ் எழுதினா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் நிலைக் காவலா்கள், தீயணைப்பு வீரா்கள், சிறைக் காவலா்கள் உள்ளிட்ட சீருடைப் பணியாளா்களுக்கான எழுத்துத் தோ்வு 10 மையங்களில் நடைபெற்றன. தோ்வை எழுதுவதற்காக மாவட்டத்திலிருந்து மொத்தம் 13,339 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் ஆண்கள் 10,144 போ், பெண்கள் 1,739 போ் உள்பட மொத்தம் 11,883 போ் மட்டுமே தோ்வு எழுத வந்திருந்தனா். ஆண்களில் 1,235 பேரும், பெண்களில் 221 போ் உள்பட மொத்தம் 1,456 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வை முன்னிட்டு, காஞ்சிபுரம் சரக டிஐஜி பா.சாமுண்டீஸ்வரி, எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா ஆகியோா் தலைமையில் 967 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com