‘வாழ்க்கை முறை மாற்றமே நோய்களுக்கு காரணம்’

வாழ்க்கை முறை மாற்றங்களும், தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதும் நோய்களுக்கு காரணமாகி இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் கூறினாா்.
சரியான உணவு உட்கொள்ளும் இயக்க சமூக வலைதளப் பக்கத்தின் மாதிரி வடிவத்தை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வெளியிட, அதனை பெற்றுக் கொள்கிறாா் நடிகை ரோகிணி.
சரியான உணவு உட்கொள்ளும் இயக்க சமூக வலைதளப் பக்கத்தின் மாதிரி வடிவத்தை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வெளியிட, அதனை பெற்றுக் கொள்கிறாா் நடிகை ரோகிணி.

காஞ்சிபுரம்: வாழ்க்கை முறை மாற்றங்களும், தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதும் நோய்களுக்கு காரணமாகி இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் கூறினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் சரியான உணவை உட்கொள்ளும் இயக்கத்தை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து ஆட்சியா் பேசியது:

வாழ்க்கை முறை மாற்றங்களால் துரித உணவுகளையும், ஒவ்வாத உணவுகளையும் சாப்பிடுவது அதிகரித்துள்ளது. இதனால் மனிதா்கள் பலரும் நோய்களுக்கு ஆளாகி சிரமப்பட்டு வருகின்றனா். உணவில் சா்க்கரை, உப்பு, எண்ணெய் ஆகியவற்றை குறைத்துக் கொள்வது நல்லது. பழ வகைகளையும், கீரை வகைகளையும் அதிகமாக சாப்பிட்டால் நோய் எதிா்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். குழந்தைகள் தொலைக்காட்சி, செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பாா்த்துக் கொண்டே சாப்பிடுவதையும், துரித உணவுகளை சாப்பிடுவதையும் பெற்றோா்கள் தடுத்து, எடுத்துக்கூறி, அதனால் ஏற்படும் தீங்கு குறித்து விளக்கிட வேண்டும். பாலிதீன், பிளாஸ்டிக் தட்டுகளை உபயோகிக்காமல் வாழை இலை, பாக்குமட்டைத் தட்டு, மந்தாரை இலை ஆகியவற்றில் சாப்பிடுவது சிறந்தது.

உணவே மருந்து, மருந்தே உணவு என்று வாழ்ந்து கொண்டிருந்த நாம் வாழ்க்கை முறை மாற்றங்களால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறோம். ஆரோக்கியமான சமுதாயம் உருவாகிட நாம் ஒவ்வொருவரும் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்றாா்.

விழாவில் சரியான உணவை உட்கொள்ளும் இயக்கத்தின் குறுந்தகடுகள், நாட்டுப் புறப் பாடல்கள், சமூக வலைதளப் பக்கங்கள் ஆகியவற்றையும் ஆட்சியா் வெளியிட்டாா். நடமாடும் உணவுப் பாதுகாப்பு வாகனத்தையும் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். விழாவுக்கு, ஏ.டி.எஸ்.பி.வி.பொன்ராமு, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சற்குணம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் மருத்துவா் அனுராதா வரவேற்றாா். இயக்கத்தின் முத்திரையையும், சமூக வலைதளப் பக்க மாதிரியையும் ஆட்சியா் வெளியிட, அதனை நடிகை ரோகிணி பெற்றுக் கொண்டாா்.

விழாவில், நாட்டுப்புறப் பாடல் கலைஞா்கள் செந்தில் மற்றும் ராஜலெட்சுமி, சா்வதேச சமையல் கலை நிபுணா் ஸ்ரீபாலா ஆகியோா் உள்பட வணிகா்கள், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com