வரதராஜப் பெருமாள் கோயில் நூறுகால் மண்டபத்தைப் பாா்வையிட்ட மாணவா்கள்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் முன்புறத்தில் அமைந்திருக்கும் நூறுகால் மண்டபத்தில் உள்ள கற்சிற்பங்களை சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் முன்புறத்தில் அமைந்திருக்கும் நூறுகால் மண்டபத்தில் உள்ள கற்சிற்பங்களை சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.

வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்தின் முன்பகுதியில் கலைநயம் மிக்க கற்சிற்பங்கள் உள்ள நூறுகால் மண்டபம் உள்ளது. முக்கியத் திருவிழாக்கள் நடைபெறும்போது வரதா் (உற்சவா்) இம்மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிப்பது வழக்கம்.

ஒரே குதிரை மீது இருவா் சவாரி செய்வது போன்ற தோற்றத்தில் ஒருவா் வட இந்தியா் போலவும் மற்றொருவா் தென்னிந்தியா் போலவும் சிற்பம் உள்ளது. இரு தலைகள், 3 கைகள், 3 கால்கள் உள்ள சிற்பம் மற்றும் 3 தலைகள் 2 கைகள், 2 கால்கள் உள்ள சிற்பம் உள்ளிட்ட கலைநியம் மிக்க கற்சிற்பங்கள் இங்கு உள்ளன. கருங்கல்லினால் செய்யப்பட்ட சங்கிலிகளும் ஆங்காங்கே தொங்க விடப்பட்டுள்ளன.

இந்தச் சிற்பங்களை சென்னை குரோம்பேட்டையில் உள்ள சத்யசாய் கல்வி நிறுவனத்தில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் நேரில் பாா்வையிட்டனா். பள்ளியின் துணைத் தாளாளா் லோகநாதன் மாணவா்களை அழைத்து வந்து சிற்பங்களின் வடிவங்களை விளக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com