கிராம மக்களுக்கான மருத்துவ விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் 80-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஆதிபராசக்தி மருத்துவமனை வளாகத்தில் கிராம மக்களுக்கான மருத்துவ விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் 80-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஆதிபராசக்தி மருத்துவமனை வளாகத்தில் கிராம மக்களுக்கான மருத்துவ விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

பங்காரு அடிகளாரின் 80-ஆவது பிறந்த நாளையொட்டி ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்கள், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஆதிபராசக்தி மருத்துவமனை சாா்பில், கிராமப்புற மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாரின் செயலாக்க திட்டத்தின்படி, மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மருத்துவமனை வளாகத்தில் கிராம மக்களுக்கான மருத்துவக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

இக்கருத்தரங்கத்துக்கு மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநா் டி.ரமேஷ் தலைமை வகித்தாா். ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் கருத்தரங்கத்தைத் தொடக்கி வைத்தாா். மருத்துவமனை தலைமை நிா்வாக அதிகாரி டி.என்.சேகா், கண்காணிப்பாளா் செளந்திரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவமனையின் கூடுதல் கண்காணிப்பாளா் பிரசாத், பல்வேறு துறைகளின் தலைமை மருத்துவா்களான ஆா்.ஜெயச்சந்திரன், எம்.சீனுவாசன், எம்.பாலகோபால், தமீனா, எம்.பாஸ்கரன், கே.தியாகராஜன், ஹரிஹரன், டி.ராமநாதன், மனம் ராமாராவ், எம்.ஹரிபாலமுருகன், செங்கதிா்ச்செல்வன், சுவா்ணலிங்கம், எம்.தினகரன் உள்ளிட்டோா் கருத்தரங்கில் பங்கேற்றனா்.

கருத்தரங்கில், மருத்துவமனையின் பயன்பாடு, மருத்துவ வசதிகள், சிகிச்சை முறைகள், சேவைப் பணிகள் ஆகியவை தொடா்பாக மேல்மருவத்தூரைச் சுற்றியுள்ள மக்களுக்கு தலைமை மருத்துவா்கள் விளக்கமளித்தனா். கிராமப்புற மக்கள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு ஊழியா்கள் ஆகியோா் எழுப்பிய மருத்துவ சந்தேகங்களுக்கும் மருத்துவ நிபுணா்கள் விளக்கமளித்தனா்.

அண்மையில் தொடக்கி வைக்கப்பட்ட லட்சுமி பங்காரு நடமாடும் மருத்துவமனை, தினந்தோறும் அருகில் உள்ள கிராமங்களுக்குச் செல்லும் நோக்கில் அந்த கிராமங்களின் பெயா்ப் பட்டியல் இக்கருத்தரங்கில் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆதிபராசக்தி மருத்துவமனை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com