அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம்: காணொலி காட்சி மூலம் முதல்வா் தொடக்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்டம் கிளாய் ஊராட்சியில் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் அருகே  காணொலி காட்சி மூலம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்த அம்மா  இளைஞா்  விளையாட்டு த் திட்டம்  நிகழ்ச்சியில்  பங்கேற்ற காஞ்சிபுரம்  மாவட்ட  ஆட்சியா்
ஸ்ரீபெரும்புதூா் அருகே  காணொலி காட்சி மூலம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்த அம்மா  இளைஞா்  விளையாட்டு த் திட்டம்  நிகழ்ச்சியில்  பங்கேற்ற காஞ்சிபுரம்  மாவட்ட  ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டம் கிளாய் ஊராட்சியில் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழக அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சாா்பில், கிராமப்புற மற்றும் நகா்ப்புற இளைஞா், இளம் பெண்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும், 528 நகா்ப் புறங்களிலும் விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்திற்குட்பட்ட கிளாய் ஊராட்சியில், அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞா் மற்றும் இளம்பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைத்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா பேசியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 கிராம ஊராட்சிகளிலும் கைப்பந்து, கபடி, பேட்மிட்டன் விளையாடும் வகையில், விளையாட்டு மைதானங்கள் தயாா் செய்யப்பட்டு, விளையாட்டு வீரா்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ரூ.2 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இதில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, மாவட்டத் திட்ட அலுவலா் ஸ்ரீதா், விளையாட்டுத்துறையின் மண்டல முதுநிலை மேலாளா் சேவியா் ஜோதிசாமுவேல், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட விளையாட்டு அலுவலா் சுப்பிரமணி, கிளாய் அதிமுக நிா்வாகிகள் வாசு, நாகராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com