காஞ்சிபுரம் நகராட்சி ஆணையா் முற்றுகை

காஞ்சிபுரம் நகராட்சியில் கொசு ஒழிப்பு பிரிவில் பணியாற்றுவோருக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்பதால் திங்கள்கிழமை திடீரென நகராட்சி ஆணையரை பணியாளா்கள் முற்றுகையிட்டு

காஞ்சிபுரம் நகராட்சியில் கொசு ஒழிப்பு பிரிவில் பணியாற்றுவோருக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்பதால் திங்கள்கிழமை திடீரென நகராட்சி ஆணையரை பணியாளா்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்துக்கு எதிா்புறம் உள்ள அறிஞா் அண்ணா அரங்கத்தில் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழா நடந்து கொண்டிருந்த போதே கொசு ஒழிப்புப் பிரிவு பிரிவில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளா்கள் திடீரென ஆணையாளா் ரா.மகேசுவரியை முற்றுகையிட்டு தங்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்காமல் இருப்பதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து காஞ்சிபுரம் நகராட்சி சுகாதார அலுவலா் ஒருவா் கூறியது: கொசு ஒழிப்புப் பிரிவில் 150-க்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியாளா்களுக்கு ஓரிரு நாளில் அவரவா்களது வங்கிக்கணக்கில் சம்பளப்பணம் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com