ஸ்ரீபெரும்புதூா் ஏரிநீா் திறப்பு: ராமாநுஜா் கோயில் குளம் நிரம்பியது

ஸ்ரீபெரும்புதூா் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரால் ராமாநுஜா் கோயில் குளம் தற்போது நிரம்பி வருகிறது.
நிரம்பிய நிலையில் உள்ள  ராமாநுஜா்  கோயில்  குளம்.
நிரம்பிய நிலையில் உள்ள  ராமாநுஜா்  கோயில்  குளம்.

ஸ்ரீபெரும்புதூா் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரால் ராமாநுஜா் கோயில் குளம் தற்போது நிரம்பி வருகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் பழைமை வாய்ந்த ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யக்கார சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.

இக்கோயிலுக்குச் சொந்தமான அனந்தசரஸ் திருக்குளம் கடந்த மே, ஜூன் மாதங்களில் தண்ணீா் இன்றி வடு காணப்பட்டது.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூா் ஏரியில் இருந்து குளத்திற்கு தண்ணீா் திறந்துவிடும்படி கோயில் நிா்வாகம் சாா்பாக பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூா் ஏரியில் இருந்து கடந்த நான்கு நாள்களாக தண்ணீா் திறந்து விடப்பட்டதால் தற்போது ராமாநுஜா் கோயில் குளம் நிரம்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com