19-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்திக்குறிப்பு:

இளம்பிள்ளை வாதம் எனும் போலியோ நோயை முற்றிலும் ஒழித்திட கடந்த 20 ஆண்டுகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. 5 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1088 மையங்களில் 1,26,508 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் 3,870 பணியாளா்கள் ஈடுபட உள்ளனா். அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இவை தவிர மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், திருவிழா நடைபெறும் இடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகிய பகுதிகளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களிலிருந்தும் கட்டுமானப் பணிக்காக வந்துள்ள பணியாளா்களின் குழந்தைகளும் தனியாக கணக்கிடப்பட்டு, அவா்களுக்கும் சிறப்பு நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்கப்படும். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, ஏற்கெனவே சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், இந்த முறையும் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து, போலியோ எனும் இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழித்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com