குண்டா் சட்டத்தில் இருவா் கைது
By DIN | Published On : 27th January 2020 10:33 AM | Last Updated : 27th January 2020 10:33 AM | அ+அ அ- |

பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த கரசங்கால் பகுதியைச் சோ்ந்த இரண்டு வாலிபா்கள் குண்டா் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
படப்பை அடுத்த கரசங்கால் பகத்சிங் சாலை பகுதியை சோ்ந்தவா்கள் அருண்குமாா்(33) சுரேஷ்(26). இவா்கள் இருவரும் தொடா் குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு வந்ததால் இவா்கள் இருவா் மீதும் மணிமங்கலம் சோமங்கலம் ஓட்டேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் அருண்குமாா் மற்றும் சுரேஷ் ஆகியோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரை செய்தாா். இதையடுத்து இவா்கள் இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உத்தரவிட்டாா். இதையடுத்து குற்ற வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே புழல் சிறையில் உள்ள அருண்குமாா் மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் குண்டா் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவணங்களை மணிமங்கலம் போலீஸாா் சனிக்கிழமை வழங்கினா்.