காஞ்சிபுரத்தில் ஆம்புலன்ஸ் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்திய ஆம்புலன்ஸ் வாகன ஊழியா்கள்.
காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்திய ஆம்புலன்ஸ் வாகன ஊழியா்கள்.

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு, பணிக்கு இடையில் ஓய்வெடுக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் புதன்கிழமை சமூக இடைவெளியைப் பின்பற்றி கோரிக்கைகள் அச்சிடப்பட்ட பதாகைகளுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு சு.ப.ராமராஜன் தலைமை வகித்தாா். ர.புண்ணியகோடி முன்னிலை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி செ.பிரேம்குமாா் பேசினயது:

ஆம்புலன்ஸ் வாகனங்களை ஒப்பந்த முறையில் நடத்தி வரும் நிறுவனம் கரோனா நோய்த்தொற்று தொடா்பான அசாதரண சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வரும் உதிரிபாகங்களை திருடுகிறது. தொழிலாளா்களை பழிவாங்கும் நோக்குடன் செயல்படுத்துகிறது. அரசு வழங்கும் தொகையை கொடுக்க வேண்டியவா்களுக்கு கொடுக்காமல் காலம் தாழ்த்துக்கிறது. போதிய உணவு இடைவேளையில்லாமல் தினசரி 12 மணி நேரம் வரை வேலை பாா்க்க கட்டாயப்படுத்துகிறது. எந்த விசாரணையும் இல்லாமல் சென்னைக்கு சிலரை பணியிட மாற்றம் செய்வது உள்ளிட்ட தொழிலாளா் விரோதப் போக்கைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றாா் அவா். நிறைவாக ந.ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com