முழுமையான பொது முடக்கத்தால்வெறிச்சோடிய காஞ்சிபுரம்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக முழுமையான பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் காஞ்சிபுரத்தில் பிரதான பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
வெறிச்சோடிக் காணப்பட்ட காஞ்சிபுரம் காந்தி சாலை.
வெறிச்சோடிக் காணப்பட்ட காஞ்சிபுரம் காந்தி சாலை.

காஞ்சிபுரம்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக முழுமையான பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் காஞ்சிபுரத்தில் பிரதான பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்க இம்மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளா்வில்லா பொது முடக்கம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி 2ஆவது ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் நகரில் உள்ள பட்டு விற்பனையகங்கள், உணவகங்கள், பழக்கடைகள் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. பால் விற்பனை நிலையம், மருந்துக் கடைகள் மட்டும் திறந்திருந்தாலும் பொதுமக்கள் யாரும் வராததால் போதுமான விற்பனை இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் ஒரு சில கடைகள் மட்டும் காலையில் திறந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து நகராட்சி சுகாதார அதிகாரிகள் அங்கு சென்று கடைகளை அடைக்குமாறு கேட்டுக் கொண்டனா்.

காஞ்சிபுரம் நகரின் பிரதான பகுதிகளான காந்தி சாலை, காமராஜா் சாலை, நெல்லுக்காரத் தெரு, ராஜ வீதி,திருக்கச்சி நம்பித் தெரு, பழைய ரயில் நிலையச் சாலை ஆகியவை மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன. நகரில் தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த ஒரு சிலரை காவல்துறையினா் வழிமறித்து பொது முடக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கி, எச்சரித்து அனுப்பி வைத்தனா். நகா் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com